கட்சி நிர்வாகிகளோடு மனு அளிக்க சென்ற தவெக தலைவர் ! - தொடர்ந்து பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக விஜய் காட்டம்...

பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுவை
கட்சி நிர்வாகிகளோடு மனு அளிக்க சென்ற தவெக தலைவர் ! - தொடர்ந்து பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக விஜய் காட்டம்...
Published on
Updated on
2 min read

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகாரளிக்க தவெக தலைவர் விஜய் தலைமை செயலகம் வந்திருக்கிறார். அவரோடு தவெக கட்சி நிர்வாகிகளான, செங்கோட்டையன், சி. டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரும் உடன் வந்திருக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது, ஆனால் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக புகாரளிப்பதற்காக விஜய் தற்போது தலைமை செயலகத்திற்கு வந்திருக்கிறார். தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன், சி. டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரும் உடன் வந்திருக்கின்றனர். பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுவை அளிக்க வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவெக சார்பாக பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியநிலையில், அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காரணம் திமுகதான் என்று தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு நாள்கள் முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், அவர்களின் தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தனது X தளத்தில் தனது கேள்விகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை அமைச்சர் மா. சுப்ரமணியன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினர்.

"தற்போது 'கோட் ஆஃப் கான்டேக்ட்' அமலில் உள்ளது. தேர்தல் ஆணைய இணைதளத்தில் 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பித்தால் அனுமதி கிடைக்கும். 48 மணி நேரத்திற்கு முன்னால் சுவிதா (Suvidha) என்ற ஆப் மூலம் எந்த நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம்?, அதை எங்கு நடத்த போகிறோம்?, எவ்வளவு பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்? என்பது போன்ற தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். தற்போது யாரும் தேர்தல் ஆணையத்தை தேடி சொல்லவேண்டியது இல்லை, காவல்துறையினரை தேடி சொல்லவேண்டியது இல்லை, எந்த அரசு நிர்வாகத்திற்கும் அவர்கள் சொல்லவேண்டியது இல்லை. ஆன்லைனில் பதிவு செய்தால் 48 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு அனுமதி தானாகவே கிடைத்துவிடும். இப்படி இருக்கையில் அரசிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?". என்று அவர் விளக்கப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தற்போது தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளோடு தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை பார்த்து புகாரினை அளிக்க சென்றிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com