

புதுச்சேரியில் கடந்த 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் கடந்த மாதம் கடிதம் வழங்கப்பட்ட நிலையில் (நவ 02) தேதி வரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. எனவே தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆலோசனை செய்ததை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ரோடு ஷோ நடத்துவதற்கு கரூர் சம்பத்தை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக விஜய் கலந்து கொள்ளும் பொதுக்குழு கூட்டத்தை புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நாளை (நவ 09) ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான அனுமதி கடிதத்தை (நவ 05) ஆம் தேதி புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பொது குழு கூட்டத்திற்கான வேலைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை காலை 10.30 மணியளவில் விஜய் மக்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஐந்தாயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை கூட்டத்தில் கலந்து கொள்ள தவெக தொண்டர்களுக்கு கட்சியின் சார்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் “நம் வெற்றித் தலைவர் அவர்கள். தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
1. கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள். உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின் தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
3. காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
5. வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங். பழைய துறைமுகம் மற்றும் இந்திரா காந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக்கூடாது.
6. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்து கொள்வது கண்டிப்பாகக் கூடாது.
7. எளிதில் அடையாளம் காணும் வகையில் கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
8. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ. அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
9. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள். மரங்கள். வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts). மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" புதுச்சேரியில் கடந்த 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் கடந்த மாதம் கடிதம் வழங்கப்பட்ட நிலையில் (நவ 02) தேதி வரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. எனவே தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆலோசனை செய்ததை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ரோடு ஷோ நடத்துவதற்கு கரூர் சம்பத்தை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்திருந்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.