“திமுகவின் ஒரு மேயர் கூட ஜெயிக்க முடியாது” - உதயநிதிக்கு நேரடி சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா… எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்!

செந்தில் பாலாஜியை திருட சொல்லி அந்த பணத்தை மகனுக்கும், மருமகனுக்கும் கொடுத்தது யார்?...
“திமுகவின் ஒரு மேயர் கூட ஜெயிக்க முடியாது” - உதயநிதிக்கு நேரடி சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா… எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்!
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் நேற்று ஆர். கே நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளாட்சி தேர்தலுக்கான வெள்ளைய தொடங்கி விட்டதாகவும் அதிலும் தமிழக வெற்றி கழகம் எதிர்பார்க்காத வெற்றியை அடையும் எனவும் கூறினார். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியை மேயர் பிரியா பொது நிகழ்ச்சியில் அவமதித்தது குறித்தும் பேசி திமுகவினருக்கு பதிலளித்திருக்கிறார்.

அதில் “நாங்கள் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்காக பணியை செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் தோல்வி அடைந்த திமுக கூட்டம் போட்டு நமது வெற்றி குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது போல திமுக எப்போதும் தோல்வியடைந்தது இல்லை, கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரின் மகன் என எல்லோரும் சாதாரண ஒருவரிடம் தோல்வியடைந்திருக்கின்றனர். அதற்கு காரணம் நமது அண்ணன் முதலமைச்சர் விஜய். மேலும் தற்போது ஜென்சி இளைஞர்களுக்கான கூட்டம் என்று போட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இருந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.

தற்போது வரை திமுகவில் இருந்து பேசியவர்கள் யாரும் திமுக என் தோற்றது என்பது குறித்து பேசவில்லை. ஆனால் நமது தமிழக வெற்றி கழகத்தில் நாம் தோற்ற தொகுதியில் காரணம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்ய தொடங்கி விட்டோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று நமது தலைவர் சொன்ன போது கிண்டல் செய்து சிரித்தார்கள். முடியாது என்று கூறினார்கள் அதனை இப்போது சாத்தியப்படுத்தி காட்டி இருக்கிறோம். இந்த ஐந்து வருடங்களில் தெருக்கள் முழுவதும் போதை கலாச்சாரத்தை பரப்பிவிட்டார்கள். அதனை இந்த 30 நாட்களில் மாற்றுவதற்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி திட்டங்களை வகுத்து வருகிறார்.

செந்தில் பாலாஜியை திருட சொல்லி அந்த பணத்தை மகனுக்கும், மருமகனுக்கும் கொடுத்தது யார்?... ஸ்டாலின் அவர்கள். இப்போதும் கூட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் நமது சட்டமன்ற உறுப்பினர்களை பணி செய்ய விடுவதில்லை. ஒரு சகோதரியின் வெற்றிக்காக நான் கண் கலங்கினேன் திருவிக நகரின் பல்லவி அக்கா 8 மாத கர்ப்பிணியாக தெரு தெருவாக சென்று வெற்றி பெற்றார். ஆனால் அப்படி பட்டவர்களை பொது நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தியை கொடுக்காமல் திமுக மேயர் பிரியா அவர்கள் அவமானப்படுத்தினார்கள்.

இப்போது சொல்கிறேன் உதயநிதி அவர்களே இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கிவிடும் அதில் சென்னையின் 25 மேயர்களில் ஒரே ஒரு மேயர் பதிவியை வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றல் அப்போது நான் ஒப்புக்கொள்கிறேன் திமுகவை யாராலும் ஆசைக்க முடியாது என்று இது என் நேரடி சாவல்… அன்று பல்லவி அக்காவை அவமானப்படுத்திய போது எங்கள் தேர்தல் வேலைகளை நாங்கள் தொடங்கிவிட்டோம்” என நேரடியாக எதிர்க்கட்சி உதயநிதி அவர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com