
'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் மட்டுமின்றி, கட்சியின் நிர்வாக மற்றும் சட்டரீதியான எதிர்காலத்திலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக -விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில், கடுமையாக சட்ட சிக்கலில் உள்ளது தமிழக வெற்றி கழகம்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உடனடியாக ஆனந்தும், நிர்மல் குமாரும் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
ஆனாலும் விசாரணை தொடக்க நிலையில் உள்ளதாக கூறி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரது முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஜோதி ராமன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியானதால், தவெக -வின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கைதாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆனால் இதற்கு இடையில் எந்த வழக்கும் வாங்காமல் இருக்கும் தவெக கொள்கை பரப்பு செயலாளர், ராஜ் மோகன் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த கேசும் வாங்காமல் எதற்கு இவர் பதுங்கியிருக்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் இவரது போன் கடந்த ஒரு வாரமாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரின் சமூக வலைதள கணக்குகள் கூட அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், நெட்டிசன்கள் மீம்களை போட்டு வறுத்தெடுக்கின்றனர்.
கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துகொண்டு, இப்பெரும் துயரத்திற்கு பொறுப்பேற்காமல் ஓடி ஒளிவது எவ்வளவு பெரிய அவலம். தலைமையே அப்படித்தான் இருக்க்கும்போது இரண்டாம் கட்ட தலைவர்களும் அவ்வாறே இருப்பர் என அரசியல் விமர்சகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.