கரூர் வேலுச்சாமி புரத்தில் செப் 27 அன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த பரப்புரையின் போது வழக்கத்திற்கு மாறாக விஜயை பார்க்க அதிக மக்கள் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 41 பேர் மூச்சுத்திணறியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். இந்த சம்பவ தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் இது குறித்து காணொளி மூலம் தனது வருத்தத்தை தெரிவித்திருந்த தவெக தலைவர் விஜய்.
அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்து ஒவ்வொரு குடும்பத்தையும் கரூருக்கு நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கரூருக்கு செல்லமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்து வருகிறார். இதற்கு நேற்று காலை முதலே தவெக தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களை தங்களது சொந்த வாகனகளில் அழைத்து வந்து கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் அரங்கில் தங்க வைத்திருந்தனர். பின்னர் இந்து சொகுசு பேருந்துகள் மூலம் நேற்று இரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாமல்லபுரம் அழைத்துவரப்பட்டனர்.
அங்கு பார் பாயிண்ட்ஸ் என்ற தனியார் விடுதியில் தனி தனி அறையில் ஒதுக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார் தவெக தலைவர். ஏற்கனவே உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இழப்பீடு தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களுக்கு அறிவித்திருந்த இழப்பீடு தொகை இன்னும் வழக்கப்படாத நிலையில் இந்த சந்திப்பின் போது அந்த இழப்பீடு தொகையை தவெக தலைவர் விஜய் நெறி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சந்திப்பினை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில் “விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கரூர் செல்லும் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமலும், அனுமதி மறுத்ததாலும் இவ்வாறு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள்ளோம்” என தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.