"நான் வீட்டுல தான் இருப்பேன் CM சார்; என்னை எது வேணும்னாலும் பண்ணிக்கோங்க" - கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்

சிஎம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்..
"நான் வீட்டுல தான் இருப்பேன் CM சார்; என்னை எது வேணும்னாலும் பண்ணிக்கோங்க" - கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்
Admin
Published on
Updated on
1 min read

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றியுள்ளார் தனது வலியையும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். அந்த காணொளியில் “என் வாழ்க்கையில் நான் இது போன்ற ஒரு வலிமிகுந்த ஒரு நிகழ்வை நான் பார்த்ததே இல்லை என் மனது முழுவதும் வலி நிறைந்து உள்ளது. அரசியல் காரணங்களை எல்லாம் தாண்டி இனி என் மனதில் மக்களின் பாதுகாப்பு தான் முதன்மையாக இருக்கும், அது போன்ற இடங்களை இனி தேர்ந்தெடுப்போம். நானும் மனிதன் தான் அதனை உயிர்கள் இறந்த நிலையில் என்னால் மட்டும் எப்படி அங்கிருந்து வரமுடியும். மீண்டும் நான் அந்த இடத்திற்கு சென்றால் தேவையற்ற பிரச்சனை வரும் எனவே அதை நான் தவிர்த்தேன். 

இந்த சூழ்நிலையில் எனக்காக பேசிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி, என்ன நடந்தது என தெரியாமல் தவித்து கொண்டிருந்த நிலையில் கரூர் மக்கள் நடத்தை சொல்லும் போது தெய்வமே வைத்து உண்மையை சொன்னது போல இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் வெளியில் வரும், கட்சியை சேர்ந்த தோழர்கள் மீது, சமூக வலைத்தளங்கள் பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். சிஎம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் தொண்டர்களை விட்டு விடுங்கள், நான் ஒன்னு  என் வீட்டில் இருப்பேன் இல்லை அலுவலகத்தில் இருப்பேன்” என பேசியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com