``கலெக்டர் முதல் மேயர் வரை.. ஆபாச வெறிபிடித்த தவெக" - எல்லை மீறுகிறதா அரசியல் ஆபாசம்? முகம் சுழிக்க வைத்த வீடியோ!

எல்லா கட்சிகளிலு மற்ற கட்சியைச் சேர்ந்த தலைவர்களை ஆபாசமாக சித்தரிக்கும் இழிபிறவிகள் இருந்தாலும், சமீபத்தில் வெளியான திமுவை கிண்டல் செய்யும் பதிவு ஒன்று கட்சியில் உள்ள பெண்களை ஆபாசமாக சித்தரித்தது பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
From Collector to Mayor... TVK Consumed by Vulgarity — Is Political Obscenity Crossing the Line? Disturbing Video Sparks Outrage!
``கலெக்டர் முதல் மேயர் வரை.. ஆபாச வெறிபிடித்த தவெக" - எல்லை மீறுகிறதா அரசியல் ஆபாசம்? முகம் சுழிக்க வைத்த வீடியோ!
Published on: 
Updated on: 
2 min read

தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் அரசியலில் தாக்கம் செலுத்தி வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் அரசியல் குறித்து வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தலின்போது, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், சில வேட்பாளர்களை மோசமாகச் சித்தரித்தும் அரசியல் விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன.

வெஸ்லியன் மீடியா புராஜெக்ட் (Wesleyan Media Project) என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில், 2026 தேர்தலின்போது AI மூலம் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் இணைய விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.1,729 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமின்றி, கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமற்ற ஏராளமான இணையப் பக்கங்களும் AI வீடியோக்கள் மூலம் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு அரசியலில் தாக்கம் செலுத்துவது தமிழகத்திலும் நடந்து வருகிறது. ஆனால், அதில் எல்லை மீறிய ஆபாசப் பதிவுகள் புருவங்களை உயரச் செய்துள்ளன.

அனைத்துக் கட்சிகளிலும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் இழிபிறவிகள் இருந்தாலும், சமீபத்தில் திமுகவைக் கிண்டல் செய்யும் வகையில் வெளியான ஒரு பதிவு, அக்கட்சியைச் சேர்ந்த பெண்களை ஆபாசமாகச் சித்தரித்திருந்தது. இது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெறும் 'Bindass' என்ற பாடலில் கவர்ச்சியான உடையணிந்து நடனமாடும் நோரா ஃபதேஹியின் முகத்துக்குப் பதிலாக மேயர் பிரியா முகம் டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் குறைபாட்டைக் கேலி செய்யும் வகையில், அவர் சக்கர நாற்காலியில் வரும் கதாபாத்திரமாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கையில் மதுக் குவளை வைத்திருப்பது போலவும், உதயநிதியின் உடையில் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது போலவும் அந்த வீடியோவில் எடிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ள திமுக மகளிர் அணி, "தவெகவினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமும் வக்கிரமும் நிறைந்தது என்பதற்கு இது ஒரு சாட்சிதான். ஆன்லைன் அப்யூசர்களால் (Online abusers) நிறைந்த ஆபாச வெறிபிடித்த கும்பல்தான் தவெக. எம்.எல்.ஏ. முதல் உறுப்பினர் வரை பொறுக்கிகளைத் தேடிப்பிடித்துக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மறைந்த தலைவரை இழிவுபடுத்தும் தவெகவின் மலினப் புத்திக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சமூகப் பணியாற்றும் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க, சாதி வெறிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை." எனக் கூறியுள்ளது.

மேலும் திமுக ஐடி விங், "சமூகவலைத்தளங்கள் முழுவதும் ஆபாச வசவுகளை கொட்டுவது, குறிப்பாக பெண்களை இழிவாக சித்தரிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் த.வெ.க Virtual Abusers, ஒரு மாவட்ட கலெக்டர் முதல் சென்னை மாநகரத்தின் மேயர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

பெண்களுக்கு எதிராக த.வெ.க பொறுக்கிகள் எந்த விதமான சைபர் குற்றங்கள் புரிந்தாலும் அவர்கள் மீது த.வெ.க அரசின் காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசிக்கிறதா?

தொடர்ந்து இது போன்ற சைபர் குற்றங்கள் புரிபவர்கள் மீது, உரிய ஆதாரத்துடன் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." எனக் கூறியுள்ளது.

எந்த கட்சியாக இருந்தாலும் பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்கள் மீது மலிவான ஆபாசத் தாக்குதல் நடத்துபவர்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா என்பதே பொதுமக்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.

From Collector to Mayor... TVK Consumed by Vulgarity — Is Political Obscenity Crossing the Line? Disturbing Video Sparks Outrage!
``ஷாக் கொடுக்கும் சமாஜ்வாதி.. சரண்டர் ஆகாத காங்கிரஸ்.." - ராகுல், பிரியங்காவின் உத்திகள் வேலை செய்கிறதா? பரபரக்கும் உ.பி அரசியல்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.