
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூரில் உள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற கோரி வன்னிய சமூகத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த மாற்று சமூகத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் நான்குக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டனர்.
இந்த தாக்குதலில் இரண்டு காவலர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக 55 பேரை கைது செய்து, மேலும் பிரச்சனை ஏதும் ஏற்படா வண்ணம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.