அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது! ஒருவருக்கு வலைவீச்சு!!

அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது! ஒருவருக்கு வலைவீச்சு!!
Published on
Updated on
1 min read

சிதம்பரம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேரை கைது செய்து மேலும் ஒரு மாணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது கத்தியபடி சென்றதால் நடத்துனர் தண்டபாணி அவர்களை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கீழசெங்கல்மேடு பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கிய மாணவர்கள் 3 பேர் திடீரென பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து நடத்துனர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com