மறைமலைநகரில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கஞ்சா, விற்பனையில் ஈடுப்பட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் மூன்றுகிலோ கஞ்சாவை, பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடன் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்ததில் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் மதியழகன் ஆகியோர் மறைமுகமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதியில் கடைகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. வியாபாரம் செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.