விருத்தாச்சலம் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.....!

விருத்தாச்சலம் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.....!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன். இவரின் மகனான, 8வயதுகொண்டசிறுவன் இன்பராஜ் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் 14 வயதுகொண்ட தினேஷ்குமார் ஆகிய இருவரும், அக்கிராமத்தில்அமைந்துள்ள பெரிய ஏரியில், குளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஏரியின் சகதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சிறுவர்களும், வெளியேற முடியாமல், ஏரியில் மூழ்கி உள்ளனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால்,  அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏரியில், மூழ்கிய சிறுவர்களை தேடினர். இந்நிலையில், நீண்டநேர தேடுதலுக்குபின்பு,  இரண்டு சிறுவர்களையும் மீட்ட அக்கிராமத்தினர் அவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தபோது, மருத்துவர்கள் பரிசோதித்ததில் இரண்டுசிறுவர்களும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

அதன்பின்னர் அவர்களது உடலை பிரேதப்  பரிசோதனைக்காகக்  கொண்டு சென்றனர். இது குறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அக்கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கோடை விடுமுறை  தொடங்கியுள்ளதால், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் சிறுவர்கள் சிறுமிகள் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com