தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழப்பு...காரணத்தை அறிவித்த ஆட்சியா்...!

தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழப்பு...காரணத்தை அறிவித்த ஆட்சியா்...!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கமளித்துள்ளாா். 

தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே பாரில் சட்டவிரோதமாக விவேக் என்ற இளைஞரும், குப்புசாமி என்ற முதியவரும் மது வாங்கி குடித்துள்ளனர். மது குடித்த சில நிமிடத்திலேயே இருவரும் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வட்டாட்சியரை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிறைப்பிடித்தனர். 

தொடர்ந்து கலப்பட மது விற்பனை செய்யப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டிய உறவினர்கள்,  டாஸ்மாக் மதுபான பாரில் போலி மது விற்பனை செய்த நபரை தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக போலீசாா் பாா் உாிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த டாஸ்மாக் பாருக்கு வருவாய் துறை அதிகாாிகள் சீல் வைத்தனா். 

இந்நிலையில் மது அருந்திய இருவா் உயிாிழந்ததற்கு சயனைடு தான் காரணம் என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மதுஅருந்தி உயிாிழந்த இருவாின் உடல்களை பிரேத பாிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் ஆய்வறிக்கையில் உயிரிழந்தவர்களின் வயிற்றுப் பகுதி, கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளில் சயனைடு விஷம் இருந்தது தெரிய வந்துள்ளதாக தொிவித்தாா். விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும் என தெரிவித்த ஆட்சியர், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com