உதயநிதி ஸ்டாலின் (பிளாக் ஷீப் யூ-டியூப்) ஊழியர் உயிரிழப்பு: விசாரணை நடத்தாதது ஏன்? கேள்விகளை அடுக்கும் சவுக்கு சங்கர்

பிளாக் ஷீப் யூ-டியூப் நிறுவன அலுவலகத்தின் ஊழியர் அந்த அலுவலக சர்வர் ரூமில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இன்னும் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தாதது ஏன் என சவுக்கு சங்கர்
உதயநிதி ஸ்டாலின் (பிளாக் ஷீப் யூ-டியூப்) ஊழியர் உயிரிழப்பு:  விசாரணை நடத்தாதது ஏன்?  கேள்விகளை அடுக்கும் சவுக்கு சங்கர்
Published on
Updated on
1 min read

செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர்

அப்போது பேசிய அவர், பிரபல நடிகர் சிவ கார்த்திகேயனுக்குச் சொந்தமான பிளாக் ஷீப் என்ற யூ-டியூப் சேனலை தற்போது உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கதிர் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சித்திரம் டிவி என்ற சேனலை தற்போதுள்ள பிளாக் ஷீப் அலுவலகத்தில் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பிளாக் ஷீப் அலுவலகத்தில் டெக்னீஷியனாக பணியாற்றி வரும் விஜயவாடாவைச் சேர்ந்த பாலஜி என்பவர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி இரவு அலுவலக சர்வர் அறையில் உயிரிழந்ததாகவும், மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு எந்த நடவடிக்கையும் இல்லை 

ஆனால் வழக்குப்பதிவு செய்து 4 நாட்கள் ஆகும் நிலையில், அந்த மரணம் தொடர்பாக தற்போது வரை சம்பவ இடம் சென்று காவல் துறையினர் தடயங்களை சேகரிக்கவோ? மாரடைப்பு காரணமாகத்தான் பாலாஜி உயிரிழந்தாரா? என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை நடத்தவோ இல்லை என குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் பிளாக் ஷீப் யூ-டியூப் அலுவககத்தில் உள்ள அன்றைய தினத்திற்கான அனைத்து சி.சி.டி.வி பதிவுகளையும் அந்த நிறுவனத்தார் அழித்துள்ளர் என்ற அவர், இது தடையங்களை அழிக்கும் சட்டவிரோத செயல் எனவும், இதையும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிளாக் ஷீப் யூ-டியூப் ஊழியர் உயிரிழப்பில் 

மேலும், உயிரிழந்த பாலாஜியின் மனைவி விஜயவாடாவில் இருந்து வந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றுவிட்டதால் அவரது குடும்பத்தாரை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற அவர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தும் உதயநிதிக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் காவல்துறையினர் இதுவரை அங்கு விசாரணை நடத்த செல்லவில்லையா? எனவும் காவல் துறையினரை விசாரணை செய்ய விடாமல் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முடக்கி வைத்துள்ளாரா? எனவும் கேள்வி எழுப்பினார். 

கேள்வி எழுப்பும் சவுக்கு சங்கர் 

மேலும், பாலாஜியின் உயிரிழப்பை கொலை எனக் கருதவில்லை என்ற அவர், சந்தேக மரணம் ஒன்று நடந்தால் அதை விசாரிக்கும் கடமையுள்ள காவல்துறை இன்னும் தனது பணியை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று மட்டுமே கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார். மேலும், சட்டவிரோதமாக தடயங்களை அழிக்கும் வகையில் சி.சி.டி.வி பதிவுகளை அழிக்கும் உரிமையை பிளாக் ஷீப் நிறுவத்தாருக்கு யார் கொடுத்தது? என கேள்வி எழுப்பிய அவர், அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com