
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாஜக -வும் 2026 தேர்தலை குறிவைத்து மிகவும் சிரத்தையோடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பாஜக பூத் கமிட்டி மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்காக திருநெல்வேலி வருகை தந்துள்ளார். இந்த மாநாட்டில் தமிழ் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர் ராஜன், எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், சரத் குமார், அண்ணாமலை பல உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அமித்ஷா உரை!!
ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நினைவு கூர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த தமிழ் மண்ணை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தான் துணை குடியரசு தலைவராக வீற்றிருக்க போகிறார், என்ற இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் தஞ்சையில் நம்முடைய சோழ மன்னர் ராஜேந்திர சோழன் அவர்களின் நினைவை கொண்டாடும் வகையிலே அவருடைய நினைவை போற்றி மாபெரும் விழா எடுத்தார்.
திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து திருக்குறளுக்கு மரியாதை சேர்த்திருக்கிறார். மதத்தின் பெயரால் கொலை செய்த மிகப்பெரிய துக்ககரமான ஒரு நிகழ்வுகள் பாஹல்காமில் நடைபெற்றது. அப்போது நமது பாரத பிரதமர் மோடி அவர்கள், இந்த தீவிரவாத தாக்குதலை வேரோடு அழிப்போம் என்று சபதம் ஏற்று பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட ஒவ்வொரு தீவிரவாதியின் வீட்டில் புகுந்து தாக்கி அவர்களை அழித்து ஆபரேஷன் சிந்துர் மூலம் சாதனை படைத்திருக்கிறார். தீவிரவாதத்தின் முதுகெலும்பை முறித்து காட்டினார் நமது மோடி அவர்கள். ஆபரேஷன் மகாததேவ் நடவடிக்கையின் மூலம் எந்த நபர்கள் அந்த தாக்குதலில் ஈடுபட்டார்களோ அவர்களை கண்டறிந்து அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 130 வது சட்ட முன்வடிவான பதவி பறிப்பு மசோதாவை கருப்பு சட்டம் என்கிறார் ஸ்டாலின். கருப்பு சட்டம் என்று சொல்வதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் இருட்டு நடவடிக்கைகளில், கருப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். உங்களுக்கு அதை சொல்ல எந்த உரிமையும் இல்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் துள்ளி குதிக்கிறார்கள் இந்த சட்டம் வரக்கூடாது என்று. நான் நேரடியாக கேட்கிறேன், பல மாதங்கள் சிறையில் இருந்த துரைமுருகன், செந்தில் பாலாஜியும் எப்படி ஆட்சி அமைக்க முடியும். சிறையில் இருந்துகொண்டே ஆட்சி செய்வார்களா? சிறை சென்றவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “2026 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக -வின் NDA கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
இந்திய நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி என்றால் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சி தான். ஏராளமான ஊழல்களை இன்னும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு ஒரே அஜெண்டா தான் இருக்கிறது. அவரது மகனை முதலமைச்சராக உருவாக்க வேண்டும். சோனியா காந்திக்கும் ஒரு முக்கிய அஜண்டா இருக்கிறது. அவருக்கும் அவரது மகன் ராகுல் காந்தியை பிரதமராக உருவாக்க வேண்டும், இவர்க்ளின் ஆசை எந்த நாளிலும் நிறைவேறாது” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.