விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனர் - முதல் உதவி செய்த உதயநிதி ஸ்டாலின்.

விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
udhanidhi stalin
Published on
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது அப்போது கோபாலபுரம் வழியாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதியதால் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயமடைந்து தடுமாறி கீழே விழுந்தார்

இதைத்தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அரங்கத்தை ஆய்வு மேற்கொண்ட பிறகு அவ்வழியாக வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்தில் நேரில் பார்த்தவுடன் தனது காரை நிறுத்திவிட்டு பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனரை தண்ணீரை கொடுத்து நலம் விசாரித்து உடனடியாக அவரை அருகில் இருக்கக்கூடிய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com