"வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார், வாய் திறக்குறதில்ல, கேள்வி கேட்போம்" - உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

விவசாயிகள் நீங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழு கடன் தள்ளுபடி வேணும்னு கேட்டுட்டு இருக்காங்க. அதற்கு வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறக்கறது இல்ல.
உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

தவெக அரசு விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி கடன் தள்ளுபடி அளிக்கவில்லை என்பதையும் காவிரி விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளையும் கண்டித்து திமுகவினர் கருப்பு உடையில் சட்டமன்றம் வந்திருந்தனர்.

பட்ஜெட்ல உறுப்படியா எதுவுமே கிடையாது

பட்ஜெட் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,"நேற்றைக்கு மாதிரிதான் இன்னைக்கும். திராவிட முன்னேற்ற கழக அரசுடைய திட்டங்கள் எல்லாம் பெயரை மாத்தி, அதற்கு முன்பு அவங்களுடைய கட்சி பெயருடைய வார்த்தையை மட்டும் சேர்த்து புது திட்டம் போல அறிவிச்சிருக்காங்க. எனவே இந்த பட்ஜெட்ல உறுப்படியா எதுவுமே கிடையாது.

குறிப்பா தேர்தல் சமயத்தில் இப்ப இருக்கக்கூடிய முதலமைச்சர் முக்கியமான ஒரு வாக்குறுதியாக, ஐந்து ஏக்கர் வரைக்கும் நிலம் வச்சிருக்கக்கூடிய எல்லாருக்கும் முழு பயிர் கடன் தள்ளுபடி அப்படின்னு சொன்னார். அவர் கலந்துகிட்டதே கொஞ்சம் கூட்டங்கள்தான். ஆனா அந்த எல்லா இடத்திலயும் இந்த வாக்குறுதியை சொல்லிதான் மக்களை ஏமாத்துனாரு. ஆனா ஆட்சிக்கு வந்ததும் அதுக்கு எதுவுமே செய்யல.

முதல்ல என்ன சொன்னாரு, 50,000 வரை கடன் தள்ளுபடி அப்படின்னாரு. அப்புறம் எங்களுடைய கோரிக்கை, விவசாயிகளுடைய கோரிக்கை எல்லாம் ஏற்று அது 75,000 மாத்துனாரு. ஆனா இன்னைக்கு விவசாயிகள் நீங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழு கடன் தள்ளுபடி வேணும்னு கேட்டுட்டு இருக்காங்க. அதற்கு வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறக்கறது இல்ல.

அது மாதிரி மேகதாட்டு விவகாரம் இன்னைக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு சீரியஸா போயிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியும். காவேரில நமக்கு கிடைக்க வேண்டிய நீரை இன்னைக்கு வரைக்கும் கர்நாடகம் திறக்கல. திறக்க முடியாதுன்னு, கொடுக்க முடியாதுன்னு வெளிப்படையாகவே சொல்லிட்டாங்க. முதலமைச்சர் நான் போய் பேச்சு வார்த்தை பண்ண போறேன்னாரு. ஆனா 'தயவு செய்து வராதீங்க, நாங்க தண்ணி எல்லாம் கொடுக்க முடியாது' அப்படின்னு அங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் சொல்லிட்டாரு.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க. இந்த காவேரி விஷயத்துல, மேகதாட்டு விஷயத்துல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே கருத்துல இருக்கறாங்க, ஒற்றுமையா இருக்கறாங்கங்கறத காட்டுவோம் அப்படின்னு தொடர்ந்து முதலமைச்சருக்கும் இந்த அரசுக்கும் நம்ம திமுக சார்பாக கோரிக்கை வச்சுக்கிட்டே இருக்கிறோம். அதற்கும் வழக்கம் போல முதலமைச்சர் வாய திறந்து பதில் சொல்ல மாட்டேங்கிறாரு.

நாளைக்கு இன்னும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கு, விவசாயிகளுக்கான பல்வேறு பிரச்சனைகளை பத்தி பேசணும்னு நாளைக்கு கேள்வி நேரம் முடிஞ்ச உடனே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரணும்.

எங்களுக்கு காவேரி பிரச்சனை பத்தி பேசணும், விவசாயிகளுடைய பாதிப்பு குறித்து அவையில விவாதிக்கணும்னு சபாநாயகர் கிட்ட எங்களுடைய கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுப்பாருன்னு நாங்க நம்புறோம். அப்போ இது தொடர்பாக இன்னும் விரிவா பல்வேறு கேள்விகளை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு முதலமைச்சர் வாய திறந்து பதில் சொல்வார் அப்படின்னு தமிழ்நாட்டு மக்கள் மாதிரி, விவசாய பங்குடி மக்கள் மாதிரி நாங்களும் காத்திருக்கின்றோம். திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்குமே விவசாயிகளுக்கு துணை நிற்கும்" என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
"இனிக்க இனிக்க வாக்குறுதிகள்.. ஏமாற்றிவிட்டது தவெக" - எடப்பாடி காட்டம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com