"ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்" உதயநிதி!

"ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்" உதயநிதி!
Published on
Updated on
1 min read

ஒடிசா இரயில் விபத்தில் தகவல் கிடைக்காத 6 பேர் பற்றி  ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியது. 

இந்த நிகழ்வில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சப்பை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் பங்களிப்போடு 10 ஆயிரம் மரங்களை சென்னை முழுவதும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது போன்ற திட்டங்களை அரசு மட்டும் செயல்படுத்தினால் போதாது, மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத எட்டு தமிழர்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு, பதில் அளித்த அவர், நேற்று ஒடிசாவில் இருந்து கிளம்பும்போது எந்த தெளிவும் இல்லாமல் இருந்ததாகவும், இங்கே வந்து அரசு அதிகாரிகளிடம் பேசும் பொழுது அந்த 8 பேரும் பாதுகாப்பாக இருந்ததை அறிந்துகொண்தாக கூறினார். மேலும் அதில் 2  பேரிடம்  பேசி விட்டதாகவும், மற்ற ஆறு பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று உடன் பயணித்தவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவத்துள்ளார். தொடர்ந்து மீதமுள்ள 6  பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை என்பதால் ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com