X தளத்தில் கொசுவத்தி ஏற்றிய அமைச்சர் உதயநிதி!!

X தளத்தில் கொசுவத்தி ஏற்றிய அமைச்சர் உதயநிதி!!
Published on
Updated on
1 min read

அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கொசுவத்தி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது, பேசுபொருளாகியுள்ளது.

அமைச்சர் உதயநிதி, சனாதனம் ஒழிப்பு மாநாட்டில், டெங்கு மற்றும் மலேரியா கொசுக்கள் போலவே, சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என பேசியிருந்தார். இதன் எதிரொலி, மிகவும் வலுவாக இருந்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் ஒரு சாமியார், உதயநிதியின் புகைப்படத்தை தீயிட்டு எரித்தும், உதயநிதியின் தலைக்கு 10 கோடியும் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் உதயநிதியின் மீது நாடு முழுவதும், பல மாநிலங்களின் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வந்தன. அது போலவே, தமிழ் நாட்டிலும், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். அதில், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, வன்மையாக கண்டித்து வருகிறார்.

சற்று முன் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்ட எச் ராஜா, உதயநிதியை உதவாக்கரை எனவும் ஆ ராசாவை கேடுகெட்டவன் எனவும் சாடியிருந்தார். எச் ராஜாவின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், கொசுவத்தி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் இணையவாசிகள், இந்த புகைப்பட பதிவு, எச் ராஜாவின் பேச்சுக்கு பதிலடி என கருதி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com