11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளுக்கு UGC அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளுக்கு UGC அனுமதி அளித்துள்ளது.
11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளுக்கு UGC அனுமதி
Published on
Updated on
1 min read

இதன்மூலம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், சாஸ்திரா மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என UGC தெரிவித்துள்ளது.

மேலும், BCA, BBA, B.Com., MCA, MBA, M.Sc., உள்ளிட்ட 80 வகையான படிப்புகளை ஆன்லைனில் கற்பதற்காக வரும் ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் படிப்புகளுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை குறிப்பிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com