

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் காதலால் ஏற்படும் சிக்கல்கள் அதிகம். ஒன்று காதலிக்க சொல்லி வற்புறுத்தி, அவர்களை கொல்லுவது அல்லது தற்கொலைக்கு நிர்பந்திப்பது. அப்படி இல்லாவிட்டால், காதல் திருமணம் செய்ததற்காக, ஆணவக்கொலை செய்வது. திருமணம் முடிந்த பின்னர், வரதட்சணை கொடுமையால் கொல்லுவது.
இப்படி வாழ்வின் அனைத்து படிநிலைகளிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருக்கிறது. நேற்றுதான் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததற்காக 12-வது படிக்கும் மாணவியை இளைஞன் ஒருவன் குத்தி கொன்றான். அதன் சுவடு ஆறுவதற்குள் லவ் டார்ச்சர் தங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எல்லா தற்கொலைகளும் ஏதோ ஒரு விதத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட கொலைகளாகவே மாறி உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் இவருடைய மனைவி மலர் இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த பெண்ணான வினிஷ்கா (19) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மாதேஷ் (19) என்பவரும் தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வினிஷ்கா தற்போது பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர்கள் வினிஷ்காவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் காதலை கைவிட்டுள்ளார்.இதனால் விரக்தி அடைந்த மாதேஷ் அவ்வப்போது வினிஸ்காவின் வீட்டருகே வந்து லவ் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் கடந்த 15-ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி உள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதனைத்தொடர்ந்து வினிஷ்கா இன்று உயிரிழந்ததன் காரணமாக உறவினர்கள் மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் ஜோலார்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.