புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியால் பரபரப்பு

புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியால் பரபரப்பு
Published on: 
Updated on: 
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பிடாரியம்மன் கோவிலில் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  இலுப்பூர் பிடாரியம்மன் கோவில் அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.

தை மாத பிறப்பை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாடிவாசலை அடைத்துள்ளனர். வாடிவாசல் அடைக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com