தமிழகத்தில் தடையற்ற மின்விநியோகம்... உறுதி செய்ய மின்சார வாரியம் அறிவுறுத்தல்...

தமிழகத்தில், தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்ய மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தடையற்ற மின்விநியோகம்... உறுதி செய்ய மின்சார வாரியம் அறிவுறுத்தல்...
Published on: 
Updated on: 
1 min read

அகில இந்திய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுதினம் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தத்தின்போது தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என உயரதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பணியாளர் நலன் பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கையில்,  ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதோடு, வேலைநிறுத்தத்தில் பங்கேற்போருக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் மற்றும் படித் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் நாளை மறுதினம் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரித்து,  தலைமையகத்துக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com