நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசு…! “குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம்” -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உலகமே தமிழ்நாட்டை பார்த்து வியக்கும் அளவிற்கு காரணம் நம் மனித வள மேம்பாடு தான். ...
நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசு…! “குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம்” -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Published on
Updated on
2 min read

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 167 உதவியாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடைப்பேச்சு பல லட்சம் பணியாளர்களை கொண்ட குடும்பம் பள்ளிக்கல்வித்துறை. நம்மை அனைவரும்‌ ஒன்றாக அமரக்கூடிய அளவில் உருவாக்கியது நம் படித்த கல்வி தான்.

உலகமே தமிழ்நாட்டை பார்த்து வியக்கும் அளவிற்கு காரணம் நம் மனித வள மேம்பாடு தான். புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் எங்களோடு நீங்கள் இணைந்திருப்பது வாழ்த்துகள்.

விளம்பரப்படுத்தும் நோக்கில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டின் நடைபெற்ற பணிகளை எடுத்துக்காட்டி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது , “இந்த கல்வியாண்டில் கிட்டத்தட்ட  179-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு அதிகப்படியான அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து , விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்த்தவர்களை கௌரவித்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் டிஎன்பிஎஸ்சி மூலமாக 167 இளைய சமுதாயத்தை சார்ந்த பிள்ளைகளுக்கு உதவியாளர் பணி ஆணை வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை என்பது ஒரு மிகப்பெரிய குடும்பம் அந்த குடும்பத்தில் இன்றைக்கு புதிய உறுப்பினர்களாக 167 நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே இருக்கின்ற உயர் அதிகாரிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் உதவியாளர் பணிகளில் இணைய உள்ளனர். துறை சார்ந்த அறிவிப்புகள் என்று பார்த்தால் 25 _ 26 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஏறத்தாழ முழுவதையும் நிறைவேற்றி விட்டோம் டிசம்பர் மாதம் முன்பாக மீதம் உள்ள பணிகளை முடிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்தப் பணிகள் முடிவுற்றால் நான்கரை ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிறைவு செய்துள்ள துறையாக பள்ளிக்கல்வித்துறை இருக்கும்.  2021 ,22,23 ஆம் ஆண்டுக்கான நிதிதான் தற்போது தான் மத்திய அரசு மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கி உள்ளது , பொதுவாகவே மத்திய அரசு நிதியினை தாமதமாக வழங்குவது வழக்கம். 

ஆனால் மாநில அரசு இரு அரசின் பங்கினை செலுத்திய பின் மத்திய அரசு வழங்கும் நிதியினை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவோம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகவே ஏதேதோ காரணங்கள் கூறி நிதியினை வழங்காமல் இருக்கின்றனர் 

அதையும் கடந்து துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்  ஆனால் இந்த ஆண்டு வரவேண்டிய நிதி இன்னும் வராமல் இருப்பதினால் ஒரு குழப்பமான நிலையை மத்திய அரசு உண்டாக்கியுள்ளது   ,  இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வராது என்று தெரிந்து கொண்டு இன்று நிதியினை விடுவித்துள்ளனர். தமிழக மக்கள் சார்பாக நான் ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் அமைத்து குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம்.

Rte மூலம் கடந்த கல்வியாண்டில் இணைந்த மாணவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டண தொகையினை மீண்டும் மாணவர்கள் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களிடம் அறிவித்துள்ளது இதற்கு கால அவகாசம் வரும் 17ஆம் தேதி வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com