அதன்படி, கல்வித்தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து, ஒவ்வொரு மாத இறுதியிலும் வாட்ஸ்அப் மூலமாக அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அதில் வினாத்தாளை பதிவிட்டு, விடைகளை எழுதி வாங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாத இறுதியிலும் 50 மதிப்பெண்களுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜூன் மற்றும் ஜூலை மாத பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்டி விட்டு, அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.