படகுகளை மீட்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

Published on
Updated on
1 min read

இலங்கை அரசு வசம் உள்ள படகுகளை விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். 

உலக மீனவர் தினத்தையொட்டி மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மீன் கண்காட்சியை பார்வையிட்ட அவர், நடமாடும் மீன் உணவக ஊர்திகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இலங்கை அரசு வசம் உள்ள படகுகளை விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com