கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன 'உத்தமர் காந்தி விருது' பெற்ற போலீஸ் ஏட்டு! 

கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன 'உத்தமர் காந்தி விருது' பெற்ற போலீஸ் ஏட்டு! 
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன உத்தமர் காந்தி விருது பெற்ற போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சார விற்பனை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவு பேரில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டு 200 மேற்ப்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சில சாராய வியாபாரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஏட்டு வாக பணிபுரிந்து வந்த ராஜசேகர் சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு விற்பனைக்கு துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஊசம்பாடியை சேர்ந்த ஒரு சாராய வியாபாரியிடம் விசாரணை மேற்கொண்டதில் கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு ராஜசேகர் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்தது  தெரிய வந்தது. மேலும் குற்றம் சம்பவங்களையும், சட்டவிரோதமான, செயல்களிலும் ஈடுபவர்களை தடுக்கும்  பணியில் ஈடுபட வேண்டிய போலீஸ்காரரே சாராய வியாபாரிக்கு  துணை போனது தெரியவந்தது.  போலீஸ் ஏட்டு ராஜசேகரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த  ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு காவலர்கள் உள்பட ஐந்து பேர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது மேலும் போலீஸ் ஏட்டு ஒருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராஜசேகர் சிறப்பாக பணிபுரிந்துமைக்காக உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com