தடுப்பூசி தட்டுப்பாடு: ‘ஊசி போட வராதிங்க மக்களே’

கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு:  ‘ஊசி போட வராதிங்க மக்களே’
Published on
Updated on
1 min read

கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 26ம் தேதி வரை 25,05,796 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி முகாம் நடைப்பெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ற வாரம் தடுப்பூசி செலுத்துவதற்கான சென்னை மாநகராட்சி பிரத்தியேகமாக ஒரு இணைய தளத்தை உருவாக்கியது. இந்த இணையதளத்தில் பதிவு செய்தால் நேரம் மற்றும் நாள் அதில் தெரிவிக்கப்படும் என்றும், அந்த நாட்களில் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.  இன்று இந்த இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது,  சென்னையில் கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இன்று தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மீண்டும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com