நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்!

நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்!
Published on
Updated on
1 min read

நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல் நிலை சரியில்லாமல் இன்று காலை காலமானார். 

90களில் ராசாவின் மனசிலே தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  திரைத்துறையில் அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. இன்று வரை தமிழ் திரைத்துறையின் நகைச்சுவையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

நடிகர் வடிவேலுவிற்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். அத்தோடு தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நன்கு பார்த்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் வடிவேல் என்று அவருடைய தம்பி ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்தும் உள்ளார். பின் தொடர்ந்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை.  55 வயதான இவர், சில நாட்களாக கல்லீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விரகனூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று  காலமானார். இன்று மாலை அல்லது நாளை காலை உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com