தற்போது கட்சி நடவடிக்கைகளில் அதிகமாக கலந்து கொள்ளாத வைகை செல்வன் சமீப காலமாக முகத்தில் தாடி வைத்து காணப்படுகிறார். இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், வைகைச்செல்வனும் மதுரை ஏர்போர்ட்டில் பேசி கொண்டிருந்தனர். அப்போது ஓபிஎஸ், வைகைசெல்வனின் தாடியை பார்த்து, என்னாச்சு? எதற்கு தாடி என்று கனிவுடன் விசாரித்தார். அதற்கு வைகைச்செல்வன் "சும்மாதான் வெச்சிருக்கேன்" என்று ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்தார்.