அதிமுக முன்னால் கத்தி தொங்குகிறதா? - "EPS முழு மனதுடன் முடிவெடுக்கவில்லை".. வைகோ பிரத்யேக பேட்டி!

மாலைமுரசுக்கு அளித்த பிரத்திங்க பேட்டியில், அதிமுக,பாரதிய ஜனதா கட்சி கூட்டணி குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதளித்த அவர் கூறியது.
vaiko exclusive press meet for malaimurasu
vaiko exclusive press meet for malaimurasu Admin
Published on
Updated on
1 min read

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியின், முதன்மைச் செயலாளர் "வைகோ" மாலைமுரசுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், அதிமுக,பாரதிய ஜனதா கட்சி கூட்டணி குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதளித்த அவர் கூறியது.

சில மாதங்களுக்கு முன்பு, மதவாத பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைக்க மாட்டோம். என்று சொன்னார். அதிமுகவையும் "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா" அவர்களையும் கொச்சைப்படுத்திய பாஜக கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். என்று எடப்பாடி சொல்லி சொல்லி இருந்தார்.

அதிமுகல இருக்கக்கூடிய கீழ்மட்ட தொண்டர்கள் கூட இந்த கூட்டணியை விரும்ப மாட்டார்கள், எந்த சூழ்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்று எடப்பாடிக்கு தான் தெரியும், பாஜகவுடன் எடப்பாடி முழு மனதுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், என்று அவருக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். அதிமுக எடுத்த இந்த முடிவு, தமிழகத்திற்கும், சிறுபான்மையிருக்கும், அதிமுகவிற்கும் செய்த துரோகம் ஆகும், அதிமுக கட்சிக்கு முன்னால் எந்த கத்தி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை, என பதிலளித்துள்ளார் வைகோ அவர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com