நீ தான் என்ன லவ் பன்ற-ல்ல?- வல்லவன் பானியில் கொடுமை செய்த காதலன்:

வல்லவன் திரைப்படத்தில் வருவது போல, நீ என்னை காதலிக்கிறது உண்மைனா தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்து வேண்டும், அப்போது தான் நீ என்னை காதலிப்பது உண்மை என நம்புவேன் என்று கூறியுள்ளார்.
நீ தான் என்ன லவ் பன்ற-ல்ல?- வல்லவன் பானியில் கொடுமை செய்த காதலன்:
Published on
Updated on
2 min read

நடிகர் சிலம்பரசன், நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தில், நடிகை ரீமா சென் மீதான காதல் உண்மை என்பதை நிரூபிக்க சிம்புவை பச்சை குத்து, கனவில் கூட நான் தான் வரனும், எப்பொழுதும் தன்னை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என கட்டளைகளை விதிப்பார் அதே போன்று காதலியை பச்சை குத்து என காதலன் டார்ச்சர் செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அடையாளம் வெளியிடப்படாத, 18வயது இளம்பெண் ஒருவர், கருங்கல் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது தோழி ஒருவருடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார். 

அப்போது அந்த தோழி மூலம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பூ கடை வியாபாரி அபினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். 

மாணவியுடன் நாள் முழுவதும் மணிக்கணக்கில் செல்போனில் காதல் கணைகளை வீசியும், ஆசை வார்த்தைகளையும் கூறியுள்ளார். இதில் மயங்கிய மாணவி காதலில் விழுந்துள்ளார். தொடர்ச்சியாக காதலை வளர்க்க இருவருவம் பல்வேறு இடங்களுக்கு செல்பி புகைப்படம் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நம்மையும் ஒரு பெண் கடந்த 2 ஆண்டுகளாக  காதலிக்கிறாரே..? இது உண்மையான காதலா..? தன்னை மாணவி காதலிப்பது நிஜமா என காதலனுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்த பயத்தை எப்படி நிரூபிப்பது என வல்லவன் திரைப்படத்தில் வருவது போன்று முடிவுக்கு வந்துள்ளார் காதலன் அபினேஷ்..

அதன்படி நீ என்னை காதலிக்கிறது உண்மைனா தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்து வேண்டும், அப்போது தான் நீ என்னை காதலிப்பது உண்மை என நம்புவேன் என்று கூறியுள்ளார்.இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி பச்சை குத்த மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், ஒரு கட்டத்தில் செல்போனில் நாம் இருவரும் பேசிய வாய்ஸ் ரெக்கார்ட், ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 

தொடர்ந்து காதலனிடம் மிரட்டல் வந்தும் பயப்படாத மாணவி அபினேஷ் உடனான காதலை பிரேக் அப் செய்துள்ளார். மேலும் கோபமடைந்த அபினேஷ் மாணவியின்  பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதோடு, மாணவியை தொடர்பு கொண்டு உன்னை இனி வாழ விடமாட்டேன் என கூறி மிரட்டியுள்ளான் வல்லவன் அபினேஷ்.

ஒரு கட்டத்தில் மாணவியின் வீட்டிற்கே சென்றும் தகராறு செய்துள்ளான். தொல்லை தாங்க முடியாத மாணவி தந்தையுடன் சென்று இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பெயரில் போலீசார் காதலன் அபினேஷை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து,அதில் இருந்த புகைப்படங்கள் குரல் பதிவுகளை கைப்பற்றினர். 

படிக்கின்ற வயதில் காதல் எனும் மாயவலையில் சிக்கி தடம் புரண்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com