

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் கடந்த 27 ஆம் தேதி மாலை கத்தியால் வெட்டப்பட்டு உடலில் 20 இடங்களில் காயம்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் வெட்டுக் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் காயம் பட்ட அந்த வாலிபர் 34 வயதுடைய சூரஜ் என்பதும் இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ரயிலில் வந்த சூரஜை அதே ரயிலில் வந்த மற்றொரு கும்பலான கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் அவரை வம்பிழுத்து வெட்டியது தெரியவந்துள்ளது.
கஞ்சா போதையில் இருந்த அரிச்சந்திராபுரம் திருவலாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய நந்தகோபால், அகர் நகர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய விக்னேஷ், ராணிப்பேட்டை மாவட்டம் சாய் நகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சந்தோஷ் மற்றும் திருத்தணி நெமிலி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சந்தோஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் வடமாநில இளைஞர் சூரஜை ரீல்ஸ் மோகத்தில் கத்தியால் வெட்டி அதனை வீடியோ எடுத்து கஞ்சா போதையில் இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இச்சம்பவம் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை பொதுவெளியில், பகிர்ந்துள்ளார், ராமேசுவரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் சில பிரிவினை வாத சக்திகள் மற்றும் திமுக வட மாநிலத்தவர்கள் குறித்து தவறாக பேசி வருவதாலும்,போதை பழக்கத்தில் இளைஞர்கள் சிக்கிக்கொண்டுள்ளதால் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
திமுக தலைவர்கள் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்திலும் வேலைக்கு செல்லலாம்,தொழில் தொடங்கலாம். தமிழகத்தில் சிலர் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி மொழி பிரச்சனையை ஏற்படுத்தி வன்முறைக்கு வழிவகுத்து விடுகின்றனர். தமிழக மக்கள் தேசிய ஒன்றுமையுடன் செயல்பட வேண்டும். ரயிலில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது குறித்து நாடகம் நடத்துகிறார். அரசு அதிகாரிகளை முன் நிறுத்தி தவற்றை மறைக்க முயற்சி செய்கிறார்கள்” - என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.