பொய் சொல்கிறாரா வன்னி அரசு? மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நடந்தது என்ன?

வரலாறு உங்களை மன்னிக்காது என வன்னி அரசுவை குற்றம்சாட்டி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மாணவர் பாரதிதாசன்.
பொய் சொல்கிறாரா வன்னி அரசு? மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நடந்தது என்ன?
பொய் சொல்கிறாரா வன்னி அரசு? மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நடந்தது என்ன?
Published on
Updated on
2 min read

தனக்கு வழங்க வேண்டிய படிப்பு செலவுக்கான உதவித்தொகையை தமிழ்நாடு அரசு விடுவிக்கவில்லை என மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர் பாரதிதாசன் சமூக வலைத்தளங்களில் புகார் தெரித்திருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அவரது புகாருக்கு மறுப்பு தெரிவித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர் பாரதிதாசன் உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விளக்கத்துக்கு பதிலளித்துள்ளார் மாணவர் பாரதிதாசன். வரலாறு உங்களை மன்னிக்காது என வன்னி அரசுவை குற்றம்சாட்டி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாரதிதாசன் தனது வீடியோவில், ``நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதிகள் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால், எனது ஆராய்ச்சிப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இது குறித்து சமூகநீதித் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்தும் எனக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்கான வாய்ப்பை மட்டும் இந்த அரசு நிறுத்துகிறது." எனக் குற்றம்சாட்டி இருந்தார். இந்த வீடியோ வைரலானது. 

இதற்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``National University of Malasiya-வில் மாணவர் திரு.பாரதிதாசன் பயிலும், Ph.D., படிப்புக்கு ஆண்டொன்றுக்கு கல்விக் கட்டணமாக ரூ.5.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர் 2025–2026-ஆம் ஆண்டு தனது முதலாமாண்டு Ph.D., படிப்புக்கு கல்விக்கட்டணம் போக மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தையும் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக கோரியிருந்த நிலையில், அரசால் மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தை வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்தொகை பெற்றப்பின் உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை உடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது, ஆனால், மாணவரால் 10 மாதங்கள் கடந்த பின்னரும், அதற்கான ஆவணங்களை சரிவர சமர்ப்பிக்காமலும், 2-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை ரூ.36.00 இலட்சத்தை கோரிவருகிறார்.

இருந்த போதிலும், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாணவரின் 2-ஆம் ஆண்டு Ph.D., கல்விக்கு அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 இலட்சம் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 இலட்சம், ஆகமொத்தம் ரூ.12.00 இலட்சம் அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.48,22,097/-ஐ மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாணவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்குரிய சரியான பயன்பாட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் உள்ளார். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே கூடுதல் தொகை பெற சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாணவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்.

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் எந்த விதமான தாமதமோ, தடங்கலோ இல்லை.

மாணவரின் தவறான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்கும் மாணவர் பாரதிதாசன்,
"மலேசியாவில் எனது முனைவர் பட்டப் படிப்பிற்கான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசு நிதியுதவி வழங்கியது உண்மைதான். ஆனால், அது 2025-ம் ஆண்டுக்கானது. எனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான ஆராய்ச்சி நிதி கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறேன்.

எனது பேராசிரியர் கடந்த மார்ச் 24, அன்று இதற்கான விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 அன்று ஆராய்ச்சி தொடர்பான கட்டண பில்கள் மற்றும் விலைப்பட்டியல்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தேன்.

அதன் பிறகு ஏப்ரல் 30 அன்று தெளிவுரைகளும், ஜூன் 8 மற்றும் ஜூன் 29 ஆகிய தேதிகளில் நினைவூட்டல் மின்னஞ்சல்களும் அனுப்பப்பட்டன. இருப்பினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. இது குறித்து அமைச்சர் வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜூலை 20, மற்றும் ஆகஸ்ட் 11, 2026 ஆகிய தேதிகளில் அவருக்கு அவசர கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தவுடன் நான் பில்களை சமர்ப்பிக்கவில்லை என்று தவறான தகவலைப் பரப்பி வருகிறார். வரலாறு உங்களை மன்னிக்காது.

அமைச்சர் வன்னி அரசு குறைந்தபட்சம் என்னிடம் என்னப் பிரச்னை என விவரமாவது கேட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர் மீதே தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்து, வெளிநாட்டில் கல்வி பயிலும் ஒரு மாணவனின் உண்மையான நிலையை கேட்டறியாமல், அதிகாரப்பூர்வமற்ற மற்றும் தவறான தகவல்களை வெளியிடுவது நியாயமற்றது. அமைச்சர் வன்னி அரசு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை மீண்டும் அரசுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருக்கிறேன். இதற்காவது சரியான பதில் கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பொய் சொல்கிறாரா வன்னி அரசு? மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நடந்தது என்ன?
CM Vijay: காதல் தோல்வி பற்றி பேசி முதல்வரை திரும்பிப் பார்க்க வைத்த MLA யார்? சட்டமன்றத்தில் கலகலப்பு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com