ஒன்றிய அரசுன்னு சொன்னா அந்த கேஸ்ல வச்சு செஞ்சிடுவாங்க... அதான் அன்புமணி பயப்படறாப்ல!! பங்கமாக கலாய்க்கும் வன்னி அரசு...

ஒன்றிய அரசுன்னு சொன்னா அந்த கேஸ்ல வச்சு செஞ்சிடுவாங்க... அதான் அன்புமணி பயப்படறாப்ல!! பங்கமாக கலாய்க்கும் வன்னி அரசு...
Published on
Updated on
3 min read

மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் மருத்துவர் அன்புமணி மீது வழக்கு விசாரணை நகர்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழக்கின் விபரங்களை மருத்துவரே குறிப்பிட்டுள்ளார்.அப்படி இருக்கும் போது ஒன்றியஅரசு என எப்படி சொல்வார்? வழக்குக்கு அஞ்சதானே வேண்டும் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணியை விசிக வன்னி அரசு வெச்சு செய்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வன்னி அரசு, ஒரு சொட்டு மது இல்லாத; ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் " என்று நம்ம மரவெட்டி ராமதாஸ் கடந்த பத்து நாட்களுக்கு முன் பாமகவின் வரைவு அறிக்கையை வெளியிட்டு இப்படி நீட்டி முழங்கினார். அதுவும் உண்மையை சொல்வதை போல முகத்தை சுளித்துக்கொண்டு (மக்கள் நம்ப வேண்டுமாம்) சொன்னார். தன்னுடைய பிள்ளை அன்புமணி மட்டுமே ஆள தகுதியானவர் என்று போகிற இடங்களில் எல்லாம் பீற்றிக்கொண்டு திரிந்தார். இந்த பொய்களை நம்ப வைப்பதற்காக ஊழல் செய்து சேர்த்து வைத்த பல கோடி ரூபாய் பணத்தை விதவிதமான போஸ்டர்களாக இறக்கி விட்டார். ஆனாலும் பங்காளி ராமதாசின் எந்த அரசியல் சித்து விளையாட்டுக்களும் "நம்பகத்தன்மை இன்மை" என்கிற கோட்டில் தான் பயணமானது. அதை இப்போது சிபிஐ உறுதிபடுத்தி உள்ளது.

ஆம்! அன்புமணி ராமதாஸ் ஊழல் பேர்வழியாக இருக்க முகாந்திரம் இருக்கிறது. ஆகவே அவர் மீது நவம்பர் இரண்டாம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவேண்டும் என்று சிபிஐ நீதிபதி  அஜெய்குமார் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சராக 2004 முதல் 2009 வரை இருந்தவர் அன்புமணி ராமதாஸ்! இவர் அமைச்சராக இருந்த போது, மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூர் இன்டெக்ஸ் மருத்துவக்கல்லூரி - மருத்துவமனை- ஆராய்ச்சி மையத்திற்கும் ( IMCHRC), உத்திரபிரதேசத்தில் உள்ள பேர்லி ரோயில்கண்டு மருத்துவக்கல்லூரி- மருத்துவமனைக்கும் (RMCH) முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ இரண்டு வழக்குகளை அன்புமணி ராமதாஸ் மீது குற்றம் சுமத்தியது. அதாவது, இந்திய மருத்துவ கவுன்சிலும் (Medical Council of India), உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவும் இணைந்து ஆய்வு செய்து மேற் கூறப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அடிப்படை வசதியற்றதாகவும், மருத்துவக்கல்லூரிகளாக தொடருவதற்கு தகுதியற்றதாகவும் இருப்பதாக சொல்லி அக்கல்லூரிகளை மூட 2008ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது.                  

அதிர்ச்சி அடைந்த ரோயில்கண்டு கல்லூரி உரிமையாளர் அகர்வால் மற்றும் இந்தூர் இன்டெக்ஸ் மருத்துவக்கல்லூரி உரிமையாளர் படோரியா ஆகியோர் நம்ம அபாடக்கர் அன்புமணி ராமதாசை சந்திக்கின்றனர். அமைச்சராச்சே உடனே அன்புமணி, புதுதில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையைச் சாரந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை இவராகவே நியமித்து, இக்குழுவின் பரிந்துரையின்படி அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறார்.

 அதாவது, கல்லூரி நடத்த தகுதி இல்லை என்று 2008ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட கல்லூரிகளுக்கு தமது பதவி காலம் முடிகிற நேரத்தில் இவராகவே தன்னிச்சையாக ஒரு குழுவை நியமித்து அனுமதி வழங்கி உள்ளார். (படித்தவராச்சே புத்திசாலியாக ஊழல் செய்துள்ளாராம்) இதைதான் குற்ற சதி என்றும், சீட்டிங், போர்ஜரி என்றும் அன்புமணி மீது 2012ஆம் ஆண்டு சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. (அனுமதி வழங்கியதற்காக எவ்வளவு கோடிகள் கை மாறியதோ?!)    

இந்த இரு வழக்குகள் தொடர்பாக ஆகஸ்ட் 2014ல் 2 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுதில்லி நீதிமன்றத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தி சொந்த ஜாமீன் பெற்றார் அன்புமணி. இன்று வரை அந்த ஊழல் குற்றச்சாட்டில் பிணையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 2014ஆம் ஆண்டு 36 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 107 அரசு தரப்பு சாட்சிகளையும், 208 குற்றம் நடந்ததற்கான டாக்குமெனட்களையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. குற்றத்துக்கான சதி, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு, இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு என்று சிபிஐ தனித்தனியாக அன்புமணி மீது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டில்  அன்புமணி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.                         

நேற்று 7-10-2015 அன்று சப்தர்ஜங் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர்கள் துபியா, குப்தா ஆகியோரும் அமைச்சக ஊழியர் சுதர்சன் குமார், கல்லூரியின் இயக்குனர் சக்சேனா, பேராசிரியர் டோங்கியா ஆகிய 5 பேர் ஊழல் குற்றச்சாட்டில் எந்த பங்கும் இல்லை என்று நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டனர்.

 அன்புமணி, இவருடைய அமைச்சகத்தின் துணை செயலாளராக இருந்த ராவ், ரோயில்கண்டு கல்லூரி உரிமையாளர் அகர்வால் உள்ளிட்ட 5 பேர் மீது ஊழல் செய்ததற்கான அடிப்படை தரவுகள் இருப்பதாக சொல்லி நவம்பர் 2 அன்று குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை' என்று நேற்று பேட்டி கொடுத்த அன்புமணி பற்றி, சிபிஐ நீதிமன்றத்தில் சொன்ன தகவல் என்ன தெரியுமா? இன்டெக்ஸ் கல்லூரிக்கு முறைகேடாக அன்புமணி அனுமதி வழங்கிய அதே நாளில் அந்த கல்லூரி உரிமையாளர் சுரேஷ் சிங் படோரியா அன்புமணியின் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்தார் என்பதே. மக்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டார் போல.

 இது தான் ஒரு பைசா ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருகிற லட்சணமாம்! அமைச்சராக வாய்ப்பு கிடைத்தவுடன் எப்படி எல்லாம் ஊழல் செய்து சுருட்ட முடியுமோ அப்படி சுருட்டியவர் தான் நம்ம அன்புமணி ராமதாஸ். யோக்கிய சிகாமணிகள் போல அப்பனும் பிள்ளையும் பேசுவது ஊரை ஏமாற்ற தான் என்று சிபிஐ வழக்கு  தெளிவுபடுத்தி உள்ளது.

 இந்த ஊழல் பேர்வழி தான் முதல்வர் வேட்பாளராம்! அதுவும் படித்தவராம், இளைஞராம், ஒபாமாவின் நண்பராம், பல விருதுகள் வாங்கியவராம்! எப்படி எப்படி ஏமாற்ற முடியுமோ அப்படி ஏமாற்றுகிறார்கள் அப்பனும் பிள்ளையும்!

 இப்போது ராமதாஸ் என்ன செய்யப்போகிறார்? முதல்வர் வேட்பாளரை மாற்ற போகிறாரா? அல்லது ஊழல் செய்தால் சவுக்கடி கொடுப்பேன் என்று சொன்னாரே அதை செய்வாரா?

 50 ஆண்டுகால ஊழலுக்கு முடிவு கட்டுவோம் என்று ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டினால் மட்டும் போதுமா? இந்த ஒரு வாய்ப்புக்கே இப்படி ஊழல் என்றால் இவர்களுக்கு நாடாளும் வாய்ப்பு கிடைத்தால் எல்லோரையும் தோற்கடித்து ஊழலில் பிரபல சீட்டிங் சாம்பியன்களாக முன்னணியில் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல எங்கும் ஊழல் மயமாக மாற்றிவிடுவாரகள் என்பதை யாரும் மறுக்க முடியாது!யோக்கியனுக வராங்க சொம்ப எடுத்து உள்ள வைங்க! இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும் வன்னி அரசு என கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com