
கள்ள திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி கிராமம் பெண்டரபள்ளி தரப்பு கிராம நிர்வாக அலுவலராக பணிசெய்து வருபவர் வேடியம்மாள் இவர்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் இதே போச்சம்பள்ளி தாலுகா மருதேரி கிராம நிர்வாக அலுவலராக பணிசெய்து வரும் சென்னகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்ப்பட்டு பின்னாளில் அது காதலாக பூத்துள்ளது.
பின்னர் பூத்து குளுங்கிய காதல் இளம் ஜோடிகள் இருவருக்கும் திருமணம் ஆனதை மறந்து காதலின் ஒருபடி மேலே சென்று மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இவர்கள் இருவரும் செய்வது கள்ள காதல் என்பதை மறந்து கள்ள திருமணம் செய்துகொண்டு அதனை நினைவு சின்னமாக பத்திரப்படுத்த இருவரும் ஒன்றாக சேர்ந்து இன்ப சுற்றுலா சுற்றியதை புகைப்படமாக எடுத்து தங்களது செல்போன்களில் புகைப்படங்களாக பதிவு செய்து அந்த புகைப்படங்களை ரசித்து வந்துள்ளனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம்
இந்நிலையில் மனைவியின் நடத்தியில் சந்தேகித்த சக்திவேல் அவரது மனைவி வேடியம்மாளின் செல்போனை சோதனை செய்த போது அதில் கிராம நிர்வாக அலுவலர் சென்னகிருஷ்ணன் உடன் திருமணம் செய்துகொண்டு கழுத்தில் இரண்டாவதாக மஞ்சள் கயிற்றில் தாலியுடன் செல்பி புகைப்படம் மற்றும் அவருடன் பல இடங்களில் சுற்றி திறந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
21 புகைப்படங்களை வாட்சாப் குழுவில் பரப்பு
பின்னர் இதுகுறித்து மனைவி வேடியம்மாளிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அவரது மனைவி வேடியம்மாள் செல்போனியில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் செல்போன் வாட்சாப் குழுக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இருவரும் இருக்கும் 21 புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்சாப் குழுக்களில் பகிர்ந்து வேகமாக பரவிவரும் விவகாரம் வருவாய்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.