
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைர் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மையை காப்போம் எழுச்சி பேரணி திருச்சி டி.வி.எஸ் டோல் கேட்டில் இருந்து துவங்கியது. டி வி எஸ் டோல்கேட் அருகே தொடங்கும் பேரணி கல்லுகுழி, தலைமை தபால் நிலையம் வழியாக சென்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைய உள்ளது. பேரணிக்காக இன்று இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் முத்தலாக் கலைச்சட்டம் வக்பு திருத்த சட்டம் எனப்பதை நிறைவேற்றி வருகிறார்கள் இந்த சட்டங்கள் நேரடியாக இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள் என்றாலும் கூட இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் அதன் உயிர் நாதமான மதச்சார்பின்மைக்கும் எதிரானது என கூறி அந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் மதச்சார்பின்மையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்கிற அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்கிற மையக்கரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் பேரணி தொடங்கிய நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட் அருகே தொடங்கிய பேரணி கல்லுக்குலி தலைமை தபால் நிலையம் வழியாக சென்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணிக்கு முன்பாக திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பேரணி நிறைவில் திருமாவளவன் உரையாற்றினார். இந்த பேரணியில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதை கைவிட வேண்டும், மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கும்பல் படுகொலையை பயங்கரவாத குற்றமாக அறிவிக்க வேண்டும் ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும், மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்க வேண்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முதல்வர் பதவி துணை முதல்வர் பதவி குறித்து கவலை இல்லை. பிரதமர் பதவி தான் அம்பேத்கர் கண்ட கனவு. சிலர் யூடியூபில் அமர்ந்து கொண்டு விடுதலை சிறுத்தைகளுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.எல்லோரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு அந்த கவலை இல்லை.
யார் முதல்வர்? என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. திமுக கூட்டணியில் விசிக சிக்கிக் கொண்டு தவிக்கிறது என சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தின் அரசியலை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். திருச்சியில் முதலில் காவல் துறை இந்த பேராணிக்கு அனுமதி மறுத்துவிட்டது, ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து இந்தப் பேரணிக்கு முதலில் கூட்டணிக்கு அனுமதி தரவில்லை..
25 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்தும் கொடியேற்ற முடியவில்லை, பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை பேரணி நடத்த முடியவில்லை அனைத்திற்கும் போராடி தான் பெற முடிகிறது...35 ஆண்டுகளாக இந்த தில்லு முல்லு அரசியலில் போராடி நிற்பவர்கள் விடுதலை சிறுத்தைகள்.
எங்களுக்கு யாருடைய அட்வைஸூம் தேவையில்லை
நான் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றுகின்றேனா? இன்று சமூக தளத்திலும், பொருளாதார தளத்திலும் எழுச்சி பெற்று நிற்கின்றோம் என்றால் விடுதலை சிறுத்தைகளின் எழுச்சி தான் காரணம் . எல்லா துறையிலும் ஒடுக்கப்பட்டவர் கள் வீறுநடை போடுகின்றார்கள் என்றால் அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சி. ஆடு,மாடு மேய்க்கின்ற தம்பி, ஆட்டோ ஓட்டும் தம்பி கோட் சூட் போட்டு வருவதை என் காண வேண்டும் அதனால் தான் பேரணிக்கு கோட் சூட் அணிந்து வர சொன்னேன்...ஏன் திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம். திமுக கூட்டணியை விட்டு வெளியே நின்றால் என்ன ஆகிவிடும், வருமானவரி, அமலாக்க துறை, ரைடு வருமா ? வேறு என்ன செய்ய முடியும் உங்களால், மாநில அரசு மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எதற்காக பயபடவேண்டும், என்ன நெருக்கடி,
நாங்கள் அம்பேத்கார் பிள்ளைகள், பெரியாரின் பிள்ளைகள்,மார்க்ஸ் கருத்தியல் வாரிசுகள் அதனால் ஒரு முடிவை துணிவாக, தெளிவாக, எடுத்து உறுதியாக நிற்கின்றேம், எங்களுக்கான காலம் கனியும் வரை நாங்கள் காத்திருப்போம்.பாஜகவின் செயல்திட்டத்தை செயல்படுத்த பலபேர் பல வேஷம் போடுகின்றனர் அதில் சில பேர் சினிமா புகழோடு வந்துள்ளனர் நடிகர்களாக என்ற வேஷத்தோடு வந்துள்ளனர் நாம் எச்சரிக்கையால இருக்க வேண்டும் எல்லாம் என்ன சொல்றாங்க இந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் சினிமா பின்னரும், நடிகர் பின்னாலும் சென்று விடுவார்கள் என்கின்றனர் அது நடக்குமா? சினிமா மோகத்திற்கு மயங்கி அரசியலில் தோல்வி அடையக்கூடியவர்களா நீங்கள்? நான் சொன்னேன் அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட யாரும் சினிமா மோகத்தில் விலை போக மாட்டார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.