
நேற்று கங்கைகொண்ட சோழபுரம், முப்பெரும் விழாவில் பிரதமருடன் விசிக தலைவர் திருமாவளவன் ஒரே மேடையில் காட்சியளித்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி வந்த பிரதமர் சாலைமார்க்கமாக ரோடு ஷோ சென்று மக்க்களை சந்தித்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா மேடையில் பிரதமர் மோடியுடன் தமிழ் நாடு அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சிதம்பரம் எம்.பி. திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
ஒன்றிய பாஜக சித்தாந்தகளை கடுமையாக விமர்சித்து வருபவர் விசிக தலைவர் திருமாவளவன் இவர்கள்.
தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து வரும் விசிக தலைவர் திருமாவளவன், பிரதமருடன் ஒரே மேடையை பகிர்ந்திருப்பது பேஸ்புரழகியுள்ளது.
இது திமுக -விற்கான எச்சரிக்கையா!?
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.
இந்த நிலையில் திமுக -வின் மிகவும் பலம் பெருந்திய கூட்டணிகள் ஒன்றான விசிக தலைவர் பிரதமரோடு ஒன்றாக இருப்பது திமுக -விற்கு ஆரோக்கியமானது அல்ல.
திருமாவை இழிவுபடுத்துகிறதா திமுக!?
கூட்டணி கட்சி என்றுதான் பெயர். ஆனால் ஆளும் திமுக திருமாவளவனை மோசமாக நடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘பாசிச பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளிக்காக அவர் பலவற்றையும் சகித்துக்கொண்டுள்ளார் என கட்சியினர் வருத்தம் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் விசிக சார்பில் மதச்சார்பற்ற பேரணி ஒன்றை நடத்தினர், ஆனால் அதை நடத்த திருமாவுக்கு பல பிரச்சனைகளை கொடுத்தாக திருமாவே மேடையில் பேசினார் திருமா…இது கூட்டணி பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என பலர் கூறியிருந்தனர்.
ஆனால் திருமாவளவன், “நம் வீட்டு நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். அவரை வரவேற்க வேண்டியது தமிழர்களின் மரபு. அந்த வகையிலேயே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இந்த மண்ணின் மைந்தன் - மண்ணுக்கு உரியவன் என்ற முறையிலும் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் அளித்த பேட்டியில், சொல்லியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.