"வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சி.." - சிறுமிகளிடம் அத்துமீறிய வெளி மாநில இளைஞர்கள்! வேளாங்கண்ணி சம்பவத்தில் தவெக-வை சாடிய கனிமொழி!

பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி.
Velankanni POCSO case
Velankanni POCSO case
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போய் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தவெக-வை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு 15 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுமிகள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். அவர்களை வெளி மாநிலத்தை சேர்ந்த இருவர் ஆசை வார்த்தைகளைக் கூறி தனியார் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆண்டனி, விஷால் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, திமுக எம்பி கனிமொழி தனது X தளபக்கத்தில், "வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது; புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு காட்டும் மெத்தனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை நடத்தப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழ்நாட்டு பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி. இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் ஏற்கனவே, தனது தேர்தல் பிரச்சார மேடைகளில் திமுக ஆட்சி காலத்தில் பெண்களின் பாதுகாப்புகள் குறித்து சரமாரியாக தனது விமர்சனங்களை முன்வைத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com