குடியரசு துணை தலைவர் தேர்தல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!!

கிட்டத்தட்ட 60 ஆண்டு கால வாழ்வை சட்டம் மற்றும் நீதிக்காக அர்ப்பணித்தவர் தான்....
stalin with sudharsha reddy
stalin with sudharsha reddy
Published on
Updated on
2 min read

இந்திய கூட்டணி சார்பாக குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து இந்திய கூட்டணி சார்பாக போட்டியிடும் சுதர்சன் ரெட்டி ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுக்கொள் விடுத்தார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் இந்திய கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை  உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

“சுதர்சன் ரெட்டி அவர்களை தமிழ்நாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன். நீதி அரசராக பணியாற்றிய நீங்கள் குடியரசுத் துணைத் தலைவர் ஆவதற்கு மிகுந்த தகுதி வாய்ந்தவர் எனவும்

அதனால்தான் இந்தியா கூட்டணி சார்பாக உங்களை அறிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

 உங்களை ஒருமனதாக அறிவித்த இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கூட்டணி மட்டுமல்ல மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் உங்களை தான் குடியரசு துணைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 60 ஆண்டு கால வாழ்வை சட்டம் மற்றும் நீதிக்காக அர்ப்பணித்தவர் தான் சுதர்சன் ரெட்டி” என கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்தையும் சமூகநீதியையும் மீட்டவர் எனவும் இவர் ஏன் இன்னைக்கு தேவைப்படுகிறார் என்றால் பாஜகவின்  அரசியல் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற வேளையில் இவர் நீதியரசராக துணை குடியரசுத் தலைவராக தேவைப்படுகிறார் எனவும் தெரிவித்தார்.

இவர் தமிழ்நாட்டை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார்.

அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜகவுக்கு எதிராக அரசமைப்பு சட்டம் பாதுகாத்தவர் தான் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்து விட்டு தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர் இதையெல்லாம் பழைய ட்ரிக் என கூறினார்.

தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மனித மாண்பிற்கு எதிரானது என பேசியவர் சுதர்சன் ரெட்டி என கூறினார்.

பன்முகத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்காது என சுதர்சன் ரெட்டி பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com