விடுதலை படம் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்... மாணவி வளர்மதி மீது வழக்கு...

விடுதலை படம் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்... மாணவி வளர்மதி மீது வழக்கு...
Published on
Updated on
1 min read

விடுதலை திரைப்படம் பாதியில் நிறுத்தபட்ட பிரச்சினையில் மாணவி வளர்மதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. தணிக்கை துறையால் ஏ சான்று அளிக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு 18 வயது நிரம்பாத தங்கள் பிள்ளைகளையும் சிலர் அழைத்து வந்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் தங்கள் பெற்றோருடன் வந்த சிறுவர்களை இடைவேளையின் போது போலீசார் வெளியேற்ற முயன்றனர். இதற்கு அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அங்கு படம் பார்க்க வந்திருந்த மாணவி வளர்மதி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானதையொட்டி போலீசார் மாணவி வளர்மதி மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல் அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐநாக்ஸ் திரையரங்க மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com