பெண்கள் சிறப்பு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்...நடத்துனரை தரக்குறைவாக பேசும் வீடியோ !

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெண்கள் சிறப்பு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர் பேருந்து நடத்துனரை தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் சிறப்பு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்...நடத்துனரை தரக்குறைவாக பேசும் வீடியோ !
Published on
Updated on
1 min read

செஞ்சி வடப்புத்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலாஜி, கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அரசு பேருந்தில் அதிக அளவு கூட்டம் ஏறியதால் மாணவரால் அதில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் பெண்கள் சிறப்பு பேருந்தில் ஏறினார். இதனால் மாணவருக்கும், பேருந்து நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாணவர் ஓட்டுனரை அவதூராக பேசியதாக தெரிகிறது.

ஆனால், மாணவர்கள் பேருந்தில் ஏறியதும் ஓட்டுநர் அவர்களை ஆபாசமாக திட்டியதாகவும், அதன் பிறகு மாணவன் பேச ஆரம்பித்ததும் வேண்டுமென்றே நடத்துனர் வீடியோ எடுத்ததாகவும் மாணவர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com