

ஏப்ரல் 23 நடக்காவிற்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் சென்னையில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மார்ச் 30 அன்று பெரம்பூர் தொகுதிக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அதனையடுத்து இன்று சென்னையில் இருந்து திருச்சி-க்கு பிரச்சாரத்திற்கு சென்றார் விஜய். இதற்கிடையில் திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முத்து முருகேச பாண்டியனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தவெக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் செய்தி மத்திய தமிழகத்தில் ஒரு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, திருச்சியில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதையடுத்து இன்று திருச்சி வந்தடைந்த விஜயை வரவேற்க தவெக தொண்டர்களும் திருச்சி மக்களும் பெரும் அலையென குவிந்திருந்தனர். மேலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று காலையிலையே டீ கடையில் இருந்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டு, எளிமையாக பிரசாரத்தை தொடங்கி இருந்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்று அதே தொகுதிக்கு விஜய் செல்லும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது. தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார், அதையடுத்து அங்கிருந்தே தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். தொடர்ந்து திருச்சி கிழக்குக்கு உட்பட்ட மரக்கடை பகுதிக்கு சென்று தனது பிரசாத்தை தொடர உள்ளார் விஜய்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.