

வேலூர் மாவட்டம், அகரம் சேரி அடுத்துள்ள கொல்லமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் “மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை வருடங்களாக ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வந்த வெகுஜன மக்கள் இயக்கம் தான் நம்ம தமிழக வெற்றி கழகம். எனக்கு உங்கள் ஊர்களுக்கு வந்து உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை ஆனால் எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் இந்த நேரத்தில் என்னென்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நம்முடைய ஆட்சி அமைத்த உடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தகளான உங்களை சந்திக்கிறேன். இப்போது சிறுது காலத்திற்கு முன்பு ஸ்டாலின் சார் பெரிய உருட்ட உருட்டுனாரு இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் என சொல்லிக் கொண்டிருக்கிறார். டெல்லி தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். உண்மையிலேயே இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும்,நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுகவிற்கு, ஸ்டாலின் சாருக்கும், எதிரான தேர்தல் தெளிவாக சொன்னால் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்..
அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக இருக்கிறது, என சொல்கிறார். தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக இருந்தது அண்ணல் அது அண்ணா, எம்ஜிஆர், காமராஜ் ஆட்சியில் தான். இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமடிக்காரர் நடத்தும் மாநிலமாக மாறிவிட்டது. மற்ற தேர்தலை போல இந்த தேர்தல் இல்லை இது ஒரு அதிசய தேர்தல்… மற்ற தேர்தல்களில் அவர் அவர் எதிரிகளை தான் எதிர்பார்ப்பார்கள், ஆனால் இந்த தேர்தலில் அனைவரும் சேர்ந்து ஒருவரை.. என்னை எதிர்க்கிறார்கள். ஏனெனில் இந்த விஜய் ஊழலை எதிர்க்கிறான்.. லஞ்சத்தை எதிர்க்கிறான்… மக்களோடு நிற்கிறான் இது தான் அவர்களுக்கு பிரச்சனை.
மற்ற தேர்தல்களில் நீங்கள் ஓட்டு மட்டும் தான் போடுவீர்கள்… ஆனால் இந்த தேர்தலில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர் தான் விசில் சின்னத்தில் நிற்க போகிறார்கள் எனவே அனைவரும் இந்த தேர்தலில் பங்கேற்று விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்க போகிறீர்கள். இதனால் தான் நமக்கு எதிராக அவதூறு பாரப்புகிறார்கள்… அவர்களுக்கு தெரியாது எனக்கு அரசியல் தெரியாது என்பது மக்களுக்கு அரசியல் தெரியாது என சொல்வது போல… என்னை அசிங்க அசிங்கமா பேசுவது மக்களை பேசுவது போல… மக்களை நேசிக்கும் விஜய் வேணுமா மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா?... இந்த ஊழல் சக்தி தீய சக்தி என யாரை சொல்கிறோம் என மக்களுக்கு தெரியும் நாம் எதையாவது பேசினால் சிலர் தேவையில்லாமல் குறுக்கில் வருகிறார்கள்…
இங்கு ஒரு கேள்வி அரசியல் வாதிகளிடம் கேட்கிறேன் உங்களிடம் தேர்தலுக்கு வருவதற்கு முன் இருந்த சொத்து எவ்வளவு? இப்போ இருக்கிற சொத்து எவ்வளவு என்பதை ஓப்பனாக சொல்ல முடியுமா? அது எந்த எந்த வழியில் வந்தது என்பதை சொல்ல முடியுமா? முதல்வர் எல்லோரும் தனக்கு நண்பர்கள் என்கிறார். என்னை நண்பனாக நினைக்கும் நீங்கள் எதற்கு கரூர் விவகாரத்தில் என் மேல் பழி சுமத்தினீர்கள்? நிகழ்ச்சி நடத்த நல்ல இடமோ? அனுமதியோ ஏன் கொடுக்கவில்லை.. உங்களின் உண்மையான நண்பர்கள் லஞ்சமும் ஊழலும் தான்.. சிறுபான்மையினர் பற்றி அண்ணா பேசியது தான் தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு…
இங்கு சில அரசியல் கட்சிகளும் சில அரசியல்வாதிகளும் அமைதியாக இருந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சனையும் வராது… இப்போது சில பிரச்சனைகளை பேசுவோம்.. மாத மாதம் மின்சார கட்டணம் மாற்றுவேன் என சொன்னீர்கள்? பல கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை… மருத்துவ வசதி இல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…சட்ட ஒழுங்கு என்பது காணாமல் போய் விட்டது… இந்த தீய சக்திக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது விசில் சின்னத்தின் பட்டனை அழுத்த வேண்டும். நம்முடை ஆட்சியின் நோக்கம் என்ன என்பது காஞ்சிபுரத்தில் சொன்னேன் அதன் தொடர்ச்சியை இங்கு சொல்கிறேன்.. பெண்களின் பாதுகாப்பு சட்ட ஒழுங்கு முறையாக இருக்கும்… அரசு பள்ளி கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும்..போதை பழக்கம் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும்… மலை கிராமங்களில் பிரசவ வசதியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்” தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.