புதுவையில் விஜய்! 30 வேட்பாளர்களை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம்.. அது என்ன 11 நிபந்தனைகள்?

30 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து வேட்பாளர்களையும் அறிவித்திருந்தனர்
vijay in puducherry
Published on
Updated on
1 min read

வருகின்ற ஏப்ரல் 9 தேதி புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். 30 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து வேட்பாளர்களையும் அறிவித்திருந்தனர்.
அதனையடுத்து தவெக தலைவர் விஜய் இன்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் புதுவைக்கு வருவதால் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் காவல்துறை தெரிவிப்பு.

மேலும் இந்த பிரசாரம் காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். என்றும் ஒவ்வொரு பிரச்சார இடத்திலும், சுமார் 2 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றும் மொத்தம் 11 நிபந்தனைகளுடன் இந்த பிரசாரம் நடக்கிறது. அதையடுத்து இன்று புதுவையில் மூன்று இடங்களில் பரப்புரையை நடத்துகிறார் விஜய். தட்டாஞ்சாவடி, கடலூர் சாலை மால் பகுதிமற்றும் பகல் 12 மணி அளவில்  தவளக்குப்பம் ஜங்ஷன் சாலையிலும் பிரச்சாரத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் அவருக்கு மக்கள் வரவேற்பு எப்போதும் போல பெரும்திரளாக கூடியது. ரோடு ஷோ-வாக பிரசாரத்திற்கு வந்தடைந்தார் விஜய்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com