2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டி யோடே களம் காண உள்ளது.
சின்ன ரீவைண்ட்..!
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.
அடுத்தடுத்து எழும் விமர்சனங்கள்!
அவரது அரசியல் பிரவேசம் உண்மையில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த சூழலில்தான் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படமவெளியாக உள்ளது இந்நிலையில்தான், அவரை தவெக தொண்டர்கள் JV என அழைக்க தொடங்கினர், அது தற்போது சர்ச்சையாகி உள்ளது. JV -என்றால் ஜோசப் விஜய் என அர்த்தம், விஜய் ஒரு சாராராக இயங்குகிறாரா என்ற சர்ச்சை எழுந்த வண்ணம் இருந்தது.
மேலும் விஜய் work from home அரசியல் செய்கிறார், என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் நடந்த அஜித் குமார் லாக் அப் மணரத்தில் விஜய் எடுத்து முன்னெடுப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய் -ன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து, அரசியல் விமர்சகர் அய்யநாதன், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “விஜய் மிகவும் நேர்த்தியாக காய்களை நகர்த்தி வருகிறார், நீங்கள் உன்னிப்பாக பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு அது புரியும், தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்க கூடிய சில மதத்தவரை, அவர் பெற்றுள்ளார். மேலும், தலித், கிறிஸ்தவர், சிறுபான்மையினர் வாக்குகளையும் பெறுவார், இளைஞர்களின் வாக்குகளையும் பெறுவார், சில சாதி ரீதியான கட்சிகளின் ஓடுகளையும் துடைப்பார், விஜய் -க்கு தெரியும் திமுக பலவீனமாக உள்ளது என்று, எனவே அவரின் முழு திட்டம் திமுக -வை அடித்து உடைப்பதே ஆகும். ஆனால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் தொண்டர்கள் ஆக்கிவிட்டார், ஆனால் அவர்களை இன்னும் அவர் அரசியல் படுத்தவில்லை என்பதுதான் உண்மை.அவருக்கு பார்முலா அரசியல் தான் தெரியும். என்ன பண்ணா யாரின் ஓட்டுக்கள் கிடைக்க்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அவரின் நோக்கமே CM ஆவதுதான்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்