பெரம்பூரில் விஜய் முன்னிலை! 34 தொகுதிகளில் தவெக லீடிங்.. மாற்று அரசியல் பலிக்குமா?

முதற்கட்ட நிலவரத்தில் விஜய் 6463 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்
tvk vijay
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், வாக்கு எண்ணிக்கை விரிவாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியல் முதல் முறையாக தேர்தல் காலம் காணும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து 233 தொகுதிகளில் தனித்து போட்டி என வேட்பாளர்களை களமிறங்கியது தமிழக வெற்றிக்கழகம்.

அதனையடுத்து திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாகத் திருச்சி கிழக்கு உருவெடுத்தது. முழுக்க முழுக்க நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், சிறுபான்மையினரின் வாக்குகள் வெற்றியாளரை தீர்மானிக்கும் உச்சகட்ட சக்தியாக உள்ளது. தற்போது அந்த தொகுதியில் விஜய்  பின்னடைவு சந்ததி வருகிறார். திருச்சி கிழக்கில் திமுக சார்பில் இனிகோ எஸ். இருதயராஜ் போட்டியிட்டார். அவர் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார. அப்போது அவரர் முன்னிலை வகித்து வருகிறார்.

ஆனாலும் பெரம்பூர் தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். முதற்கட்ட நிலவரத்தில் விஜய் 6463 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் பின்னடைவை சந்தித்து வருகிறார். மேலும் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். அடுத்தடுத்து சுற்றுகளில் இந்த நிலை தொடருமா என்பதை பார்ப்போம். மொத்தமாக தமிழக வெற்றிக்கழகம் 34 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com