“34 அப்பாவி மக்கள் பலி” - திருச்சி ஏர்போர்ட்டில் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்.. பதில் சொல்ல மறுத்து சென்ற விஜய்!

ஆர்வத்தோடும் காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த சோகத்தில் உள்ள நிலையில்..
vijay
vijay vijay
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி  ஆறு குழந்தைகள், 16 பெண்களை உட்பட 33 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டத்தில் மயங்கி விழுந்து 52  பேர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துயரமான சம்பவத்தை கேட்டு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் செந்தில் பாலாஜி சுப்ரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் விஜய்யை பார்க்க வேண்டும் என்று காலையிலிருந்து பாசத்தோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த சோகத்தில் உள்ள நிலையில் ஆறு குழந்தைகளை 16 பெண்கள் உட்பட்ட 34 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்தும் விஜய் திருச்சி விமான நிலையத்தில் இந்த கோர சம்பவம் குறித்து செய்தியாளர்கள் விஜய்யிடம் கேள்வி எழுப்பியும் அவர் செய்தியாளர்களை சந்திக்காமல்  மறுப்பு தெரிவித்து சென்றுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com