

முதலமைச்சர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரிய மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. மேலும், அவரது மனைவி சங்கீதா காணொளி வழியாக ஆஜராகியிருந்த நிலையில் விவாகரத்து வழக்கினை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சரான விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கினை தொடர்ந்திருந்தார். விஜய் முதல்வராவதற்கு முன்பே இந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு பொதுவெளியில் பெரும் பேசுபொருளானது. தற்போது, தன்னுடைய முழு சுயநினைவுடன் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சங்கீதா தரப்பில் விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று விசாரணை என்று கூறிய நிலையில் சங்கீதா அந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார்.
சங்கீதா தரப்பில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், குடும்ப நல வழக்கு என்பதால் இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைகளில் இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, முதல்வர் விஜய்யின் பணிச்சுமை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி காணொலி வாயிலாக விசாரணையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், கடந்த (ஜூன் 15) ஆம் தேதி இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், இருவரையும் முதலில் சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை (ஆகஸ்ட் 7) ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு சங்கீதா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்றே வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சங்கீதாவிடம் Zoom காணொலி அழைப்பு மூலம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்குள்ளே இருந்த பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டதா?, இனி இவர்கள் சேர்ந்து வாழ்வார்களா? என்ற பல கேள்விகள் ரசிகர்கள், நலன் விரும்பிகள் மத்தியில் எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்