“திமுகவை பேச விடுங்க” – விஜய் வைத்த கோரிக்கை..! வெளியேறிய எதிர்க்கட்சி - பேரவையில் நடந்தது என்ன?

தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படாததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து கூச்சலிடத் தொடங்கினர்.
“திமுகவை பேச விடுங்க” – விஜய் வைத்த கோரிக்கை..! வெளியேறிய எதிர்க்கட்சி - பேரவையில் நடந்தது என்ன?
“திமுகவை பேச விடுங்க” – விஜய் வைத்த கோரிக்கை..! வெளியேறிய எதிர்க்கட்சி - பேரவையில் நடந்தது என்ன?
Published on
Updated on
1 min read

aappoஇன்று சட்டமன்றத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சரின் பதிலுரை நடைபெற்றது.

பதிலுரையின் போது திமுகவினர் தொடர்ந்து சில கோஷங்களை எழுப்பினார். முதலமைச்சரின் பதிலுரை மானிய கோரிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தாண்டி அரசியல் பிரசாரம் போல பேசியதாக விமர்சனங்களை எழுப்பினர்.

முதலமைச்சர் விஜய் பேசிய பிறகு, எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படாததால் அமளி கிளம்பியது.

எதிர்க்கட்சியினர் முதலமைச்சரை பேச விடாமல் செய்ததால், தற்போது பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறிவந்தார்.

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தரணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபாநாயகரிடம் வாதிட்டு வந்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய், திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவரை அனுமதித்த பிறகும், திமுகவினரின் அமளி தொடர்ந்ததால், மானியக் கோரிக்கை விவாதத்தை முடித்து வைத்து, வனத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தைத் தொடங்கினார் சபாநாயகர்.

அதன்படி, வனத்துறை அமைச்சர் பேச ஆரம்பிக்கவும், தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

“திமுகவை பேச விடுங்க” – விஜய் வைத்த கோரிக்கை..! வெளியேறிய எதிர்க்கட்சி - பேரவையில் நடந்தது என்ன?
சட்டப்பேரவை தொடக்கத்திலேயே அமளி.. “தலைநகரமா? கொலைநகரமா?” - என எதிர்க்கட்சிகள் முழக்கம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com