"இதுல கூடவா கூட்டு?" ஜெம் வீரமணி வழக்கைக் காட்டி வாக்கு கேட்ட விஜய்.. என்ன பேசினார்?

"இத்தனை வருஷமா மூடி மறைச்சு வச்சிருந்த விஷயத்தை விஜய் தோண்டி வெளியெடுத்து அவனை உள்ள தூக்கி வச்சுட்டான். அந்த அதிர்ச்சியில் வாய் திறக்காமல் இருக்கிறார்களோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை." - விஜய்
Vijay, Gem Veeramani
ஜெம் வீரமணி வழக்கைக் காட்டி வாக்கு கேட்ட விஜய்.. என்ன பேசினார்?AI Enhanced
Published on: 
Updated on: 
1 min read

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஜெம் வீரமணி போக்சோ வழக்கை சுட்டிக்காட்டி வாக்கு கேட்டார்.

இதுகுறித்து பேசும் போது, "இன்னொரு கொடுமையான விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.

தமிழ்நாட்டு இளம் பெண்களை, பச்சைக் குழந்தைகளை ஒருத்தன் இத்தனை வருடமாக சீரழித்துக் கொண்டிருந்திருக்கிறான்.

அந்த கேஸ் போன திமுக கவர்மெண்ட்ல வந்தும், அந்த கேஸை, அந்த ஹிஸ்டரியை மூடி மறைத்துவிட்டார்கள்.

என்ன நடக்கிறது சொல்லுங்கள்? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார், வாய் திறவுங்கள்.

உங்களுடைய கூட்டணியில் உள்ள 'மற்றும் பலரும்' வாய் திறக்காமல் இருக்கிறார்கள். இதில கூடவா கூட்டணி, இதில கூடவா கூட்டணி வைத்துக்கொண்டு வாய் திறக்காமல் இருக்கிறீர்கள்?

எப்போதும் பெண்கள் பாதுகாப்பிற்கென்றே பிறந்த மாதிரி திமுகவும், இந்த மற்றும் பலரும் பேசுவார்கள். அத்தனை பெண்களை சீரழித்தவனை நாம தூக்கி உள்ள வச்சுட்டோம்.

இப்போது அவனைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. அந்த ஆளைப் பற்றியும் வாய் திறக்கல. இத்தனை வருஷமா மூடி மறைச்சு வச்சிருந்த விஷயத்தை விஜய் தோண்டி வெளியெடுத்து அவனை உள்ள தூக்கி வச்சுட்டான். அந்த அதிர்ச்சியில் வாய் திறக்காமல் இருக்கிறார்களோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை.

எல்லாம் பச்ச குழந்தைங்க சார். அவர்களுடைய வலியைப் பற்றி வந்து வெளியில பேச முடியலைன்னா, அப்புறம் என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க? இத்தனை வருஷமா என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க?" என உச்சகட்ட கோவத்தில் பேசினார்.

சில நொடிகள் இடைவெளிவிட்டு, "அதனால் மக்களே, வருகின்ற தேர்தலில் இவர்களுக்கும், இந்த திமுக கூட்டணி மற்றும் பலருக்கும் நீங்கள் சரியான பாடத்தை புகட்டியாக வேண்டும். நம்முடைய சின்னம்... விசில் சின்னம்..." என சிரித்தபடி வாக்கு கேட்டு சென்றார்.

பரப்புரையின் முழு உரையைப் படிக்க கிளிக் செய்யவும்:

மதுராந்தகத்தில் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்த முதல்வர் விஜய்.. அப்படி என்ன பேசினார்? முழு உரை விவரம் இங்கே

Vijay, Gem Veeramani
TVK vs CPIM: "தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.." - ஆதவ் பேச்சுக்கு பெ. சண்முகம் பதில்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com